தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக தொழிற்சாலை ரசாயன கழிவுகள்...!
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று வினாடிக்கு ஆயிரத்து 537 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 28 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்து 340 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கர்நாடக மாநில எல்லைப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றில் இரசாயனக் கழிவுகளை அதிக அளவு திறந்து விட்டுள்ளதால் ஆற்றில் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்வதால் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் வரக்கூடும் என ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.