இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷப்பீர்கான் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நூர்முஹமத் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் அப்துல்பாசீத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாதத்தை ஐ.நா. சபை அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் முஹமத் ஹனீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநகரச் செயலாளர் ஷகீல் அகமத் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story