இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
x

பாளையங்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோதர்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகம்மது மீரான்மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, பொருளாளர் கானகத்துமீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் கடாபி வரவேற்றார். கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபுபக்கர், அமைப்பு செயலாளர் அப்துல்மஜீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ள அனைவரையும், குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறை கைதிகளை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். மாதம்தோறும் மின் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். நெல்லை- தென்காசி சாலை, நெல்லை-அம்பை சாலை ஆகியவற்றை உடனே சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் முகைதீன் அப்துல் காதர், இலியாஸ், ஷாபி, கமால்பாட்ஷா, கான்சா, முகமதுஅலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story