இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் மதரஸாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையம் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் நல்லாசிரியர் சையது மசூது, பிரைமரி துணைத் தலைவர் முகமது இஸ்மாயில், துணைத் தலைவர் முகமது ஹசன் என்ற ஹாஜி, துணைச் செயலாளர் சையது நாகூர் ஹாஜி, பொட்டல்புதூர் பொருளாளர் மூஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் வரவேற்றார். மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல் காதர், தென்மண்டல மகளிரணி அமைப்பாளர் சபுரா பேகம் ஆகியோர் பேசினர். ரவண சமுத்திரம் பிரைமரி செயலாளர் காசியார் நன்றி கூறினார். கூட்டத்தில் மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-ம் ஆண்டு பவள விழா மாநாட்டிற்கு, கடையம் ஒன்றிய பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்துச்செல்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பீர் முகம்மது, கவுரவ ஆலோசகர்கள் கமால் ஜெய்லானி காட், மாணவரணி பொறுப்பாளர் உஸ்மான், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அக்ரம் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story