இந்திய ராணுவ வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் பேரணி


இந்திய ராணுவ வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் பேரணி
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இந்திய ராணுவ வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ராணுவத்தின் சி.ஆர்.பி.எப். பெண் வீராங்கனைகள் 120 பேர் கன்னியாகுமரியில் தொடங்கி குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலை வரை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி செல்கிறார்கள்.

அவர்கள் கடந்த 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினர். அங்கிருந்து 6-ந்தேதி புறப்பட்டு நேற்று நெல்லை வந்தனர். அவர்களுக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே நெல்லை ஜவான் மற்றும் மாநகர போலீசார் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story