இந்தியா அரசர்களால் உருவான நாடல்ல; ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவான நாடு - கவர்னர் ஆர்.என். ரவி
ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
சென்னை,
மற்ற நாடுகளைப் போல இராணுவ வீரர்கள் மற்றும் அரசர்கள் மூலம் இந்தியா உருவாகாமல் சனாதன தர்மத்தின் ஒளியாலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலான ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மீகப் பெரியோர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இசைஞானி இளையராஜா, நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நூற்றாண்டு விழா குழுவில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாடகி சித்ரா, நடிகர் ஜெயராம், பி.வாசு, நடிகர் அஜய் தேவ்கன், உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மற்ற நாடுகளைப் போல் இராணுவ வீரர்கள் மற்றும் அரசர்கள் மூலம் இந்தியா உருவாகவில்லை என்றும் ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.