அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா


அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
x

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

சுதந்திர தின விழாவினையொட்டி காரைக்குடி ஆவின் தலைமையகத்தில் அதன் சேர்மன் கே.ஆர்.அசோகன், காரைக்குடி தொழில் வணிககழகத்தில் அதன் தலைவர் சாமி திராவிட மணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் மண்டல மேலாளர் சிங்காரவேலு, அமராவதிபுதூர் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமையகத்தில் உதவி கமாண்டர் நாகரா, காரைக்குடி உட்கோட்ட காவல்துறை தலைமையகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் தேசித்தர் தங்கமணி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

காரைக்குடி

இந்திய சுதந்திர தின விழாவையொட்டி காரைக்குடி காந்தி திடலில் உள்ள காந்தி சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் மாலை அணிவித்து தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம், ராஜீவ் காந்தி சிலை ஆகிய இடங்களில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் களஞ்சியம், மாநில் வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகர செயலாளர் குமரேசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் வீரமுத்து குமார், நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலையில் தேசிய கொடிஏற்றி மரியாதை செலுத்தினார். பின் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அதன் இயக்குனர் ரமேஷா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் அதன் தாளாளர் சாத்தியன் முன்னிலையில் சுதந்திர தின விழா நடந்தது.

மானாமதுரை

மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. கொடி ஏற்றினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் முருகேசன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நகர் வீதியில் ஊர்வலமாக சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின் நகராட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார். பின் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றினார். எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் தேசியகொடி ஏற்றினார்.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராஜா, அலுவலர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவர் முனியாண்டி தேசிய கொடி ஏற்றினார்.

இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். நிகழ்வில் துணைத் தலைவர் இப்ராஹிம், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story