சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குருகாபுரம் வி.வி.இந்து தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.ஜான் ரபீந்தர், திசையன்விளை நகர பஞ்சாயத்து 12-வது வார்டு கவுன்சிலர் சுபினா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினார்கள்.
பள்ளி தாளாளர் ஜோதிஷ்குமார், தலைமை ஆசிரியர் விஜி ஜெயக்குமார், ஆசிரியை நந்தினி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் குருகாபுரம் தபால் அலுவலகத்திலும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்கள்.
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி நிர்வாகி பொன்லட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். பள்ளி தாளாளர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். ஆசிரியர் வசந்த வீனஸ் வரவேற்றார். பள்ளி முதல்வர் லாரன்ஸ் வாழ்த்தி பேசினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கல்வி நிர்வாகி சுந்தரராஜ் நன்றி கூறினார்.
நாங்குநேரி யூனியன் சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் இளையார்குளம் பாலர் பள்ளி, சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினார். துணைத்தலைவர் பொன்னம்மாள், ஊராட்சி செயலர் மா.முருகன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் அல் மதீனா பப்ளிக் சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் செய்யது அகமது கபீர் தலைமை தாங்கினார். செயலாளர் செய்யது அகமது வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செய்யது குரூப் நிறுவனங்களில் மேனேஜிங் டைரக்டர் செய்யது ரப்பானி கலந்து கொண்டு தேசிய ெகாடியேற்றினார்.
விழாவில் பொருளாளர் முகமது இப்ராகிம், காதர் மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்யது சுலைகால் பர்வீன் செய்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர் அப்துல் கபூர் நன்றி கூறினார்.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஜெயேந்திரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயேந்திரன் வி.மணி, முதல்வர் மற்றும் டீன் ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வரவேற்று பேசினர். ராணுவ அதிகாரி மேஜர் விக்னேசுவரன் தேசிய கொடி ஏற்றி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர தின உரையாற்றினார். மேலும் இஸ்ரோ, செஸ் ஒலிம்பியாட், வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம், வி.எம்.சத்திரம் ஜெயேந்திரா வித்யா கேந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி தலைவர் தமிழ்செல்வன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். கல்லூரி முதல்வர் குமரேசன், பேராசிரியர்கள் கபிரியல்ராஜ், பலவேச கிருஷ்ணன், ராதிகா, அனிதா, அலுவலக பணியாளர்கள் கலைச்செல்வி, சுகன்யா, கவுரி கலந்து கொண்டனர். களக்காடு கோவில்பத்து முத்தையா இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பிச்சம்மாள் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நெல்லை வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியம்மாள் என்ற தமிழ்ச்செல்வி, முருகன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினார்கள். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாக உணர்வை பற்றி விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் கல்வி அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.