சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் நூலக தந்தை ரெங்கநாதன் பிறந்த நாள் விழா, சுதந்திர தின விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சரவணகுமார் வரவேற்றார். கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிவப்பிரகாச நற்பணி மன்றத்தின் செயலாளர் வாழ்த்துரை வழங்கினார். ராம்ராஜ் காட்டன் ஜவுளி நிறுவன மேலாளர் சார்லஸ் பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், நூலகர் அகிலன் முத்துக்குமார் நன்றி கூறினார்.
சேரன்மாதேவி ஸ்காட் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த விழாவுக்கு ஸ்காட் பள்ளி குழும தாளாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சோமசுந்தரி முன்னிலை வகித்தார். மேரிகலா தேசிய கொடியேற்றி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கோபி குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அம்பாசமுத்திரம் யூனியன் அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு யூனியன் தலைவர் பரணி சேகர் தேசிய கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜம், விஜயசெல்வி, யூனியன் கவுன்சிலர்கள் சுடலைமுத்து, ஆகாஷ். கஸ்தூரி, இசக்கியம்மாள், சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி சுயநதி பாடப்பிரிவு இயக்குனர் வேலையா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சவுந்தரராஜா வரவேற்றார். அம்பை நகரசபை தலைவர் பிரபாகர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார்.
பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவரான 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தங்கபாண்டியன் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முனைஞ்சிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர் பி.இசக்கிதுரை தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் தடிவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.