சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு உதவி கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சாதி சான்றிதழ் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துப்பாண்டி, தாசில்தார் கவாஸ்கர், வருவாய்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சத்யா தேசிய கொடி ஏற்றிவைத்து காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர்கள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் செயல் அலுவலர் சாமிதுரை ஆகியோர் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர் சசிகலா தசரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கெலமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் தேவராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செயல் அலுவலர் சுப்பிரமணி, துணைத்தலைவர் மும்தாஜ், முன்னாள் தலைவர் சென்னபசப்பா, இளநிலை உதவியாளர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் நாகேந்திரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து வேப்பனப்பள்ளியில் உள்ள குப்பம் பஸ் நிலையத்தில் புதிதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன், முருகன், பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாதேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.