ஐகோர்ட்டில் சுதந்திர தினவிழா - நிர்வாக நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்


ஐகோர்ட்டில் சுதந்திர தினவிழா - நிர்வாக நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்
x

ஐகோர்ட்டில் சுதந்திர தினவிழாவில் நிர்வாக நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.

மதுரை


மதுரை ஐகோர்ட்டில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக அவர், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மற்ற நீதிபதிகளும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சி.ஐ.எஸ்.எப். படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, இளங்கோவன், நிர்மல்குமார், ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன், கோவிந்தராஜன் திலகவதி, வடமலை, தனபால், குமரப்பன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வக்கீல்கள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரசு சிகிச்சை பிரிவில் சுதந்திர தின சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. இதில் இளம் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் பலர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.


Next Story