கோபி, அந்தியூர், கொடுமுடியில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கோபி, அந்தியூர், கொடுமுடியில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோபி, அந்தியூர், கொடுமுடியில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோபி
தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மாநில அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடைபெற்றது.
கோபியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 52 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் எதுவும் நடக்காததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். அதிகாரிகள் யாரும் இல்லாததால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தன.
கொடுமுடி
கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகம் பூட்டப்பட்டது. பணியாளர்கள் யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திட்டப்பணிகள் 100 நாட்கள் வேலை அலுவலர்களின் அன்றாட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.