பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரிப்பு
பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரிப்பு
நெகமம்
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் விவசாயிகள் பீர்க்கங்காய் சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கு 1½ ஏக்கரில் பீர்க்கங்காய் சாகுபடி செய்ய ரூ.4 லட்சத்தில் பந்தல் அமைக்க வேண்டும். மேலும் விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம், ஆட்கள் கூலி போன்ற செலவுகள் உள்ளன. ஒருநாள் இடைவெளியில் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 40-வது நாளில் காய் பிடிக்க தொடங்கிவிடும். அடுத்த 10 நாட்களில் காய் பறிக்க ஆரம்பித்து விடலாம்.
தற்போது நெகமம் பகுதியில் பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. 1½ ஏக்கரில் ஒரு நாளைக்கு 200 கிலோ வரை காய்கள் பறிக்கப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல ஒரு நாளைக்கு 500 கிலோ வரை காய்கள் கிடைக்கும், இதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.