முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்போக சாகுபடிக்காக கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது பாசனத்திற்கு 200 கனஅடி மற்றும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி வீதம் என வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே அணையின் நேற்றைய நீர்மட்டம் 132.15 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 40 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 27 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி தற்போது 36 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story