செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!


செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!
x

செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 278 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 440 கன அடியாக உயர்ந்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை உயர்த்த அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 278 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 440 கன அடியாக உயர்ந்துள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை உயர்த்த அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் இருந்து ஏற்கனவே 25 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 3120 மில்லியன் இருப்பு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 22 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story