மீன் விலை உயர்வு
திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் சங்கரா கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. அதேபோல் கொடுவா, பாறை மீன்கள் வரத்து இல்லை.
திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் சங்கரா கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.
மீன் விற்பனை
பெரும்பாலான வீடுகளில் மீன், ஆடு, கோழி இறைச்சி இல்லாத அசைவ உணவுகளே இருப்பதில்லை. பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் ஆகிய காலங்களில் எப்போதும் இறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும்.
திருவாரூர் நகரில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் கடைகளுக்கு நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
விலை உயர்வு
மீன்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்ததால் அதன் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. சங்கரா மீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.400-க்கும், வவ்வால் மீன் ரூ.500-க்கும், காலா மீன் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இறால், மத்தி மீன், கொடுவா, பாறை, மீன்களின் வரத்து இல்லை. மீன்கள் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்திற்கு ரூ.100 வரை விலை அதிகரித்து காணப்பட்டது.
சிறிய கடைகள்
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், திருவாரூருக்கு 4 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.மீன்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக உள்ளது. வெளிநாடு, வௌிமாநிலங்களுக்கு மீன்கள் அனுப்பி வைப்பதால் உள்ளூர் பகுதிகளுக்கு மீன் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.அவ்வாறு கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
விற்பனையில் தொய்வு
பாதுகாத்து விற்பனை செய்ய முடியாததால் அன்றைய விற்பனைக்கு மட்டும் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் பல்வேறு இடங்களில் சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டு விட்டதால் மொத்த விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.