திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு


திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு
x

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயிலின் (வண்டி எண்.20605/20606) வேகம் அதிகரிக்கப்பட்டு அதிவேக ரெயிலாக வரும் 15-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25-க்கு மணிக்கு ரெயில் புறப்பட்டு காலை 10.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும். வரும் 15-ந்தேதி முதல் இந்த ரெயில் வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் முன்னதாகவே திருச்செந்தூர் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story