திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு


திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு
x

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயிலின்(வண்டி எண்.20605/20606) வேகம் அதிகரிக்கப்பட்டு அதிவேக ரெயிலாக வரும் 16-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 6.10 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 10.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும். வழக்கமான நேரத்தை விட 40 நிமிடம் முன்னதாகவே சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story