செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 9:41 AM IST (Updated: 12 Dec 2022 9:48 AM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி நீரை திறக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். அந்த வகையில் 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவானது 100 கன அடியிலிருந்து ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

24 அடி உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியாக உயர்ந்த நிலையில் ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 46 கன அடியாக உள்ளது.


Next Story