அடுக்குமாடி குடியிருப்பின் ஆவணப்பதிவு கட்டணம் உயர்வு - பத்திரப்பதிவுத்துறை விளக்கம்


அடுக்குமாடி குடியிருப்பின் ஆவணப்பதிவு கட்டணம் உயர்வு - பத்திரப்பதிவுத்துறை விளக்கம்
x

கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனங்கள், முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு திட்டமிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களிடம் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில், கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடந்து பின்பற்றப்படும் எனவும், முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களை பொறுத்தவரை கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையை பாவித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும், சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்வு என பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story