வெல்லம் விலை உயர்வு


வெல்லம் விலை உயர்வு
x

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரைஎன தயாரிக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,150-க்கு விற்றது தற்போது ரூ.1,270-க்கும், அதேபோல் 30 கிலோ எடை கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,120-க்கு விற்றது தற்போது ரூ.1,220-க்கும் விற்பனையானது.


Next Story