சமையல் எண்ணெய் விலை உயர்வு


சமையல் எண்ணெய் விலை உயர்வு
x

சமையல் எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை ஆனது.

முண்டு வத்தல்

பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9,300 ஆகவும், பாசிப்பயறு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.400 விலை உயர்ந்து ரூ.9,800 முதல் ரூ.11,200 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.4,900 முதல் ரூ.5,100 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரை விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.1,500 விலை உயர்ந்து ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29,500 வரையிலும் விற்பனையானது.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை உயர்ந்து ரூ.3,050 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.168 விலை உயர்ந்து ரூ.5,610 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.40 விலை உயர்ந்து ரூ.1,690 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.100 விலை உயர்ந்து ரூ.4,600 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,100 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை ரூ.400 விலை உயர்ந்து குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு

பொரிகடலை 50 கிலோ ரூ.3,950 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,220 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,560 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,450 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.50 விலை உயர்ந்து ரூ.950 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.


Next Story