கிராம சபை கூட்ட செலவின வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு


கிராம சபை கூட்ட செலவின வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 19 July 2022 8:57 AM IST (Updated: 19 July 2022 9:08 AM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்ட செலவின வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் மட்டும், கிராம சபைக் கூட்டம் நடந்து வந்தது. இக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்பதையும், முடிவெடுப்பதையும் அதிகப்படுத்த, இனி ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

கூடுதலாக, உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, உள்ளாட்சி தினமான நவ., 1 ஆகிய நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கும் என, முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி நடப்பாண்டு முதல், ஆறு நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பினை ரூ.1,000லிருந்து ரூ.5,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story