பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு
பவானிசாகா்
ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும்.
இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 647 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story