லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு


லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 AM IST (Updated: 25 Jun 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் மின் நிலையத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஜெனரேட்டருக்கு 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அணையில் இருந்து வினாடிக்கு 540 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல் பாசனத்துக்கு கடந்த 1-ந்தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 27 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 356 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஒரு ஜெனரேட்டர் மூலம் 32 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து லோயர்கேம்ப் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தி 36 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.


Next Story