செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு
x

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.69 அடியாக உள்ளது.

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர், உபரிநீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் 402 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், பாதுகாப்பு கருதி ஏரியின் நீர்திறப்பு வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.69 அடியாக உள்ள நிலையில், ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story