மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். 10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளைந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் இடைத்தரகர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் அவற்றை ஜவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். வாங்கிய மரவள்ளிக்கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல்வேறு ரகமான ஜவ்வரிசிகளாகவும், கிழங்கு மாவு போன்றவைகளாகவும் தயார் செய்கின்றனர். கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்களுக்கு ஒரு டன் ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது, தற்போது ரூ.12,500-க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்களுக்கு ஒரு டன் ரூ.12,500-க்கு விற்பனையானது, தற்போது ரூ.13,500-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.