வருமானவரித்துறை விவகாரம்: தி.மு.க.வினருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு


வருமானவரித்துறை விவகாரம்: தி.மு.க.வினருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு
x

வருமானவரித்துறை விவகாரத்தில் தி.மு.க.வினருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

கரூரில் கடந்த மே மாதம் 26-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது தி.மு.க.வினர் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து அவர்கள் வந்த காரை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே 15 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்தது தி.மு.க.வினர் 15 பேரும் நேற்று கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வருகிற 25-ந்தேதி வரை 15 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து 15 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story