நெற் பயிரில் இலை கருகல் நோய் பாதிப்பு


நெற் பயிரில் இலை கருகல் நோய் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நெற் பயிரில் இலை கருகல் நோய் பாதிப்பு விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல்சிறுவள்ளூர் மற்றும் மலைஅடிவாரப் பகுதிகளான புளியங்கோட்டை, புதுப்பட்டு, ரங்கப்பனூர், ராவத்தநல்லூர், ஆனைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பயிரிடப்பட்ட நெற் பயிர்களில் அதிக அளவில் இலை கருகல் நோய் தாக்கப்படுவதனால் பயிர்கள் வளர்ச்சி குறைந்து, சோகைகள் கருகிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது இப்பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நெற்பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். ஆனால் தற்போது பயிர் வளர்ந்து வரும் நிலையில் பயிரின் மேல் பகுதி முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுவதால் வளர்ச்சி மிகவும் குறைவாக காணப்படுகிறது. மேல் பகுதியில் உள்ள சோகைகள் அனைத்தும் சுருங்கிய நிலையில் காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அதிக அளவில் மழை பெய்து நெல் பயிர்கள் சேதமாகி வரும் நிலையில் மேலும் இந்த நோய் தாக்கி வருவதால் கடுமையான பாதிப்பையும் சந்தித்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயலை நேரில் ஆய்வு செய்து எங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.


Next Story