தொடர் மழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


தொடர் மழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தேனி,

தேனி பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும்.

இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இன்று காலை நீர்வரத்து ஏற்பட்டு, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து சீரான பிறகு, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.


Next Story