குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
மஞ்சூர் அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.
மஞ்சூர்
மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியை ஆனந்தி தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கிரன் வரவேற்றார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற பொருளாதார கொள்கைகளுக்கு பிறகு மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது. உணவு கலாசாரம் மாறி வருவது குழந்தைகளின் உடல் நலத்தை பாதித்துள்ளது. ரொட்டியில் உள்ள சோடியம் பை கார்பனேட், சுக்ரோஸ் உடல் நலத்தை கெடுக்கும். எனவே, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றார். ஆசிரியர் சகாயம் நன்றி கூறினார். முன்னதாக லஞ்சம், ஊழலை ஒழிக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.