ரூ.83 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா


ரூ.83 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை நகராட்சி பகுதியில் ரூ.83 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சி பகுதியில் ரூ.83 லட்சம் மதிப்பில் மக்கள் நலத்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை தங்கையா நாடார் தலைமை தாங்கினார். நகராட்சி துணைதலைவர் சங்கரா தேவி முருகேசன், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், முன்னாள் நகர செயலாளர் கு.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

சுரண்டை நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, வரகுணராமபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், கீழச்சுரண்டை பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், சுரண்டை நகராட்சி மற்றும் பொது நிதியில் கீழச்சுரண்டையில் ரூ.3 லட்சம் மதிப்பில் வரி வசூல் மையம், சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் ரூ.21 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் என பல்வேறு திட்டங்களுக்கான கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், சாந்தி தேவேந்திரன், வேல்முத்து, ரமேஷ், சிவஞானசண்முகலட்சுமி, கல்பனா அன்னபிரகாசம், ராமலட்சுமி கணேசன், அந்தோணிசுதா ஜேம்ஸ், மாரியப்பன், நிர்வாகிகள் ராஜேஸ்வரன், பூல் பாண்டியன், கூட்டுறவு கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story