அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
x

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அரியலூர்

கோடைகாலத்தையொட்டி அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் அண்ணா சிலை அருகே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் பானகம் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்), வெங்கடேசன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), அரியலூர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story