தண்ணீர் பந்தல் திறப்பு விழா


தண்ணீர் பந்தல் திறப்பு விழா
x

நெல்லை டவுனில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 75-வது நிறுவன ஆண்டையொட்டி, நெல்லை டவுன் பாட்டபத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.

நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி தலைமை தாங்கினார். மேலப்பாளையம் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் கமால் பாட்ஷா, மாநில துணைத்தலைவர் மதார் மைதீன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பீர்முகமது, நெல்லை நகர தலைவர் குலாம் மைதீன், செயலாளர் கவுது ராஜா, பொருளாளர் அலி மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம், நீர்மோர் வழங்கினார். தென் மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் நயினா முகமது கடாபி நன்றி கூறினார்.


Next Story