நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு


நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட காவேரி நகரில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து நல்வாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் துணைப்பணியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் 4 கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) முரளி சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகராட்சி கவுன்சிலர் வேல்ராஜ், நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் கவுசல்யா, நிர்வாகிகள் பிரகாஷ், பாரதிராஜா, ஜெயக்குமார், வீரா, வீரமணி, சிவா, மாணவரணி கார்த்திக், ஜான், சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story