ரூ.18¾ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
அரசு பள்ளியில் ரூ.18¾ லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கொண்டலூர் அரசு தொடக்கப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
கீழப்பாவூர் யூனியன் தலைவர் சீ.காவேரி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். யூனியன் கவுன்சிலர் ராம.உதயசூரியன் வரவேற்று பேசினார். எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், யூனியன் கவுன்சிலர் மேரிமாதவன், தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் குமார்பாண்டியன், காயாம்புசாமி, தங்கப்பழம், ஆசிரியர்கள் மீனாட்சி, வெனிஸ்டா பொன்சுதா, சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை சாரதா நன்றி கூறினார்.