இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா
மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மேலப்பாளையம் நகர புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோதர் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி, பொருளாளர் கானகத்து மீரான் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர செயலாளர் முகமது ஜாகீர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் மீரான் மைதீன் தொடக்க உரையாற்றினார்.
தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். கேரள மாநில இளைஞரணி தலைவர் செய்யது முனவர்அலி சிகாப் தங்கள் வணிக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், இளைஞர் அணி தென் மண்டல அமைப்பாளர் நயினா முகமது கடாபி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் வி.எஸ்.டி.அமானுல்லா, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் ரம்ஜான்அலி, அமுதா, அம்பிகா, சகாய ஜூலியட் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.