பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே ரூ.10 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு
பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே ரூ.10 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பேரூராட்சிக்குள்பட்ட காமராஜர் தினசரி காய்கனி சந்தை அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் பங்கேற்று, மின் விளக்கினை இயக்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், காய்கனி சந்தை, வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story