ரூ.1.65 கோடியில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு


ரூ.1.65 கோடியில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் யூனியனில் ரூ.1.65 கோடியில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட அடங்கார்குளம் பஞ்சாயத்து ஊரல்வாய்மொழி, தனக்கர்குளம் பஞ்சாயத்து கோலியன்குளம், வடக்கன்குளம் பஞ்சாயத்து புதியம்புத்தூர் மற்றும் வடக்கன்குளம், லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கூட்டப்புளி ஆகிய இடங்களில் நமக்கு நாமே திட்டத்தில் தலா 10.93 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடமும், லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து மகாராஜபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும் கட்டுவதற்கு மொத்தம் 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் நிறைவடைந்து இதற்கான திறப்பு விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், யூனியன் கவுன்சிலர்கள் மல்லிகா அருள், அனிதா, பஞ்சாயத்து தலைவர்கள் கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள் (லெவிஞ்சிபுரம்), வசந்தா முருகேசன் (அடங்கார்குளம்), சுயம்புலிங்கதுரை (தனக்கர்குளம்), ஐான் கென்னடி (வடக்கன்குளம்), தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் எரிக் ஜூட், ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மந்திரம், தகவல் தொழில்நுட்ப அணி லெட்சுமணன், பணகுடி நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story