புதிய வழி தடத்தில் போக்குவரத்து தொடக்க விழா எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் சாலையோர பள்ளத்தில் சரிந்தது


புதிய வழி தடத்தில் போக்குவரத்து தொடக்க விழா எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் சாலையோர பள்ளத்தில் சரிந்தது
x

காஞ்சீபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் புதிய வழி தடத்தில் போக்குவரத்து தொடக்க விழா எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் சாலையோர பள்ளத்தில் சரிந்து நின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய நகர் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்றிய குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் பகுதிக்கு சென்று வருவதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை என்பதால் புதியதாக அரசு பஸ் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசனிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் அனுமதியைப் பெற்று புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சீபுரம் எம்.பி க.செல்வம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வழி தடத்தில் அரசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று எல்.எல்.ஏ. எழிலரசன் பஸ்சை சிறிது தூரம் இயக்கிய போது திடீரென சாலை ஓர சிறிய பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்து நின்று விட்டது. சாலை ஓர பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தின் மீது சாய்வாக நின்றதால் உடனடியாக பஸ்சில் இருந்த எம்.எல்.ஏ மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் அனைவரும் இறங்கி கொண்டனர். எம்.எல்.ஏ ஒட்டிய பஸ் சாலை ஓர பள்ளத்தில் சரிந்து நின்றதால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story