வலங்கைமானில், அரசு பள்ளிகளில் தூய்மை பணி மும்முரம்


வலங்கைமானில், அரசு பள்ளிகளில் தூய்மை பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வலங்கைமானில் அரசு பள்ளிகளில் தூய்ைம பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்

வலங்கைமான்:

ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வலங்கைமானில் அரசு பள்ளிகளில் தூய்ைம பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 29-ந்தேதி முதல் கோடைவிடுமுறை விடப்பட்டது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகிற 7-ந்்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தொடக்கப்பள்ளிகள் 12-ந்தேதியும், 6 முதல் 12 வகுப்பு வரையிலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 14-ந்தேதியும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூய்மை பணி மும்முரம்

அதனை தொடர்ந்து வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அப்போது பள்ளிகளின் வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுப்புற வளாகம், கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டுதல், மின் இணைப்பு சரிசெய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு- ஜன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வு

இந்த பணிகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுகந்தி, அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிசந்திரன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story