சென்னை மாரத்தான் போட்டியை முன்னிட்டு, வருகிற 6-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை


சென்னை மாரத்தான் போட்டியை முன்னிட்டு, வருகிற 6-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை
x

கோப்புப்படம் 

வருகிற 6-ம் தேதி அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.

சென்னை,

சென்னை மாரத்தான் போட்டியை முன்னிட்டு, வருகிற 6-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 06.01.2024 மெட்ரோ ரெயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்.

சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற 06.01.2024 அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரெயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story