வேதாரண்யத்தில், 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


வேதாரண்யத்தில், 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

குறைந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யத்தில் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

குறைந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யத்தில் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீன்வளத்துறை எச்சரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மீன்வளத்துறை கடந்த 8-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

இதை தொடர்ந்து வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் கடற்கரை மற்றும் மீன் மார்கெட்கள் வெறிச்சோடி கிடந்தது.

கருவாடு விற்பனை மும்முரம்

வேதாரண்யம் பகுதியில் மீன் கிடைக்காததால் கருவாடு, நாட்டுக் கோழி, நாட்டு மீன்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.


Next Story