உத்தமபாளையம் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தம்


உத்தமபாளையம் தாலுகாவில்  2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தம்
x

உத்தமபாளையம் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது

தேனி

உத்தமபாளையம் தாலுகாவில் முதியவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆதரவற்ற விதவைகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 22 ஆயிரத்து 220 பேர் உதவித்தொகை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் எந்தவித அறிவிப்பும் இன்றி 2 ஆயிரத்து 107 பேருக்கு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர்கள் பணம் வரவில்லை என்று சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தள்ளாடும் வயதிலும் அலைந்து வந்தனர். இதற்கிடையே வங்கி அதிகாரிகளோ உங்களது கணக்கில் பணம் வரவில்லை என்று கூறினர். இதனால் சம்பந்தப்பட்ட முதியவர்கள் தினந்தோறும் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.


Next Story