தூத்துக்குடியில்எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:வருகிற 30-ந் தேதி நடக்கிறது


தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.

தீர்வு

அப்போது, பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் தெரிவித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story