தூத்துக்குடியில்கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வு
தூத்துக்குடியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வு நடந்தது.
தூத்துக்குடி
கூட்டுறவு சங்கங்களில் நிரந்தரமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அஞ்சல் வழியில் நடத்தப்படுகிறது. அவர்களுக்கான இறுதி பருவ தேர்வு தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் அஞ்சல் வழி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், செயலாட்சியருமான கோ.க.மாதவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துகுமாரசாமி, தூத்துக்குடி மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story