தூத்துக்குடியில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
தூத்துக்குடி-மீளவிட்டான் இடையேயான இரட்டை ரெயில் பாதை பணிகளுக்காக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06847) மற்றும் வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06672) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதே போன்று இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சியில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06848), தூத்துக்குடியில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06671), நெல்லையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06668) மற்றும் தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் நெல்லை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06667) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இன்று மும்பையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சத்ரபதி சிவாஜி மும்பை முனையம் - தூத்துக்குடி சிறப்பு ரெயில் (01143) மற்றும் வருகிற 9-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி - சத்ரபதி சிவாஜி மும்பை முனையம் சிறப்பு ரெயில் (01144) ஆகியவை கோவில்பட்டி-தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் வருகிற 10-ந் தேதி மைசூரில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் (16236) மற்றும் வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி - மைசூர் விரைவு ரெயில் (16235) ஆகியவை வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.