தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் பெஞ்சு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் பெஞ்சு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வகுப்பறைகளுக்கு தேவையான ஸ்மார்ட் பெஞ்சுகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் கட்டமாக 100 பெஞ்சுகள் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி, ஸ்மார்ட் பெஞ்சுகளை வழங்கினார். அப்போது, இந்த ஸ்மார்ட் பெஞ்சுகளால், பள்ளிகளின் தரமும், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் வருங்காலத்தில் ஸ்மார்ட் பெஞ்சுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ் குமார், சந்திரபோஸ், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் பொன்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறந்த கல்வி வழங்கியதற்காக தேசிய அளவில் விருது பெற்றதற்காக, மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.