தூத்துக்குடியில், கவர்னரை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் நேற்று காலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, கே.எஸ்.அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாதுரை, தூத்துக்குடி புறநகர் செயலாளர் ராஜா, கோவில்பட்டி நகர் ஜோதி பாசு, கோவில்பட்டி ஒன்றியம் தெய்வேந்திரன், ஓட்டப்பிடாரம் சண்முக ராஜ், உடன்குடி ஆறுமுகம், திருச்செந்தூர் முத்துக்குமார், கயத்தாறு சாலமன், மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.