திருவொற்றியூரில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு


திருவொற்றியூரில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 May 2022 11:35 AM IST (Updated: 29 May 2022 11:43 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து சென்னை தண்டையார் பேட்டைக்கு செல்லும் உயர்மின் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பி நேற்று முன்தினம் நள்ளிரவு திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்க்கில் வெற்றி நகர், முகிலன் தெரு பகுதியில் திடீரென அறுந்து விழுந்தது. 250 மீட்டர் நீளம் கொண்ட உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் லேசாக சேதமடைந்தன. உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தவுடன் மின்வாரிய கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி மூலம் தகவல் கிடைத்ததும் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story